சேலத்தில் பல கோடி ஊழல் குற்றச்சாட்டு: லஞ்ச ஒழிப்புத்துறை ADSP ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா தமிழ்நாடு அரசு?

0
246

சென்னை:*ஊழலைக் கண்டுபிடிக்க வேண்டிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிலேயே அமர்ந்துகொண்டு, பல நூறு கோடி ரூபாய் சுருட்டியதாகச் சேலம் ஏடிஎஸ்பி கே.வி. கிருஷ்ணராஜன் மீது ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் சமூக ஆர்வலர் புகார், இந்த புகார் தமிழக அரசு நிர்வாகத்தையே உலுக்கியுள்ளன.புகாரில் கூறப்பட்டுள்ளதாவது,

20 ஆண்டு மண்டல மாஃபியா:

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு ‘ஒரே மண்டலத்தில்’ வலம் வந்த கிருஷ்ணராஜன் மீது, அரசுத் துறை தலைவர்களை (HOD) மிரட்டி மாமூல் வசூலித்தது, லஞ்சப் பணத்தில் பினாமி பெயர்களில் தோராயமாக சுமார் ரூ.50 கோடிக்கும் மேல் அதிகமாகச் சொத்து சேர்த்தது என அடுக்கடுக்கான புகார்கள் குவிந்துள்ளன.

பணியிட மாற்ற உத்தரவை மதிக்காத திமிர்!

சமூக ஆர்வலர்களின் தொடர் புகார்களைத் தொடர்ந்து, கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவர் விழுப்புரத்திற்கு அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், “சேலத்தை விட்டுப்போனால் கோடிகளில் வரும் லஞ்சப்பணம் நின்றுவிடுமே” என்ற பேராசையினால், அரசு விதிகளுக்குத் சவால் விடும் வகையில் இதுவரை புதிய பொறுப்பை ஏற்காமல் போக்குகாட்டி வருகிறார்.அரசுப் பணியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டால் 7 நாட்களுக்குள் புதிய இடத்தில் இணைய வேண்டும் என்ற நடத்தை விதிகளைப் பற்றி எந்தக் கவலையுமின்றி, அதிகார மையங்களில் உள்ள தனது ‘ஆதரவாளர்களை’,ஊழல் தடுப்பு துறை IG லட்சுமி அவர்களை பயன்படுத்தி,ஏதோ கவனித்து,அவரின் பவரை வைத்து மீண்டும் சேலத்திலேயே ஒட்டிக்கொள்ள சதித்திட்டம் தீட்டி வருகிறார்.

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிர்ப்பு – அரசையே ஏமாற்றும் தந்திரம்!

மாற்றம் செய்யப்பட்ட அதிகாரி உடனடியாகப் பணிக்குச் செல்ல வேண்டும் எனப் பல உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் கிடக்க, லஞ்ச ஒழிப்புத் துறையையே ஏமாற்றி வரும் இந்த அதிகாரியின் செயல், சட்டத்தின் ஆட்சியையே கேலிக்கூத்தாக்கியுள்ளது. அரசுக்குச் சவால் விடும் இந்த *’லஞ்ச சுறா’* மீது தமிழக முதலமைச்சரும், முதன்மைச் செயலாளரும் உடனடியாகச் சட்டபடி நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது ஊழல் தடுப்புத் துறை தன் சொந்தத் துறை ஊழலையே வேடிக்கை பார்க்கப் போகிறதா? எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here