ஒழுங்காக நிலத்தை கொடுத்து விட்டு ஓடுங்கள்!விவசாயிகளை மிரட்டும் TATA electronics நிறுவனம்! முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா?

ஒழுங்காக நிலத்தை கொடுத்து விட்டு ஓடுங்கள்!மிரட்டும் TATA electronics.

0
275

டாடா தொழிற்சாலை கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு!விவசாயிகள் வேதனை!!

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்ட ராயக்கோட்டை அருகே உள்ள வன்னியபுரம் பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவு தனியார் தொழிற்சாலையான டாடா எலெக்ட்ரானிக்ஸ் எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது,இந்த நிறுவனமானது பல்வேறு மின்னணு உதிரிபாகங்களை தயார் செய்து வருகிறது,கடந்த ஆறு மாதங்களாக அதன் சுற்றி உள்ள கிராமங்களில் மர்மமான நோய் பரவி வருகிறது குறிப்பாக உள்ளுகுருக்கை கிராமத்தில் தொழிற்சாலையின் சுத்திகரிக்கப்படாத மாசடைந்த கழிவு நீரினை அருகே உள்ள ஆறுகள்,குட்டைகள்,விவசாய நிலங்களில் விட்டு வருவதால் அனைத்து மாசடைந்துள்ளது. இதுகுறித்து விவசாயி புஷ்பராஜ் (45) மாவட்ட மாசு கட்டுபாட்டு அலுவலரிடம் புகார் தெரிவித்து இருந்த நிலையில் அதன் ரிப்போர்ட் கிடைக்கப்பெற்றதில் கிணற்று நீர் முதல் அனைத்தும் மாசடைந்து உள்ளதால் கால்நடைகள்,மனிதர்கள்,விவசாய பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல என்பதால் விவசாயிகள் செய்வதறியாமல் நிற்கின்றனர்.

அதே போல் ரமேஷ் (60) என்கிற விவசாயி கூறுகையில் இந்த நிறுவனம் இந்த பகுதிக்கு வந்ததில் இருந்தே விவசாயம் செய்ய முடியவில்லை,கழிவு நீர், எலெக்ட்ரானிக்ஸ் தூசிகள்,பயிர்கள் மீது படிவதால் எந்த விவசாய பயிர்களும் வருவதில்லை அதனால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டது தற்பொழுது விவசாயம் செய்யாமல் வெறும் நிலமாக மட்டுமே உள்ளது,நிறுவனத்தை கேட்டால் ஒழுங்காக நிலத்தை எங்களுக்கு விற்று விட்டு ஓடிவிடுங்கள் இல்லை என்றால் பிச்சை எடுங்கள் என மிரட்டுகின்றனர்.மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கி உள்ளோம்,பார்க்கிறோம் என்ன நடவடிக்கை எடுக்கின்றனர்,இல்லை என்றால் போராடுவது வேறு வழியில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.இது குறித்து டாடா தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் பேச முயற்சி செய்தோம் தொடர்ப்பு கிடைக்கவில்லை.முதல்வர் விஜய் விவசாயிகளை காப்பாற்றுவாரா.

கொத்தமல்லி வயலில் tata கழிவுநீர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here