தொழிலார்,விவசாயிகள் சங்கம் இணைந்து 1000 பேருக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா!

0
114

வேப்பனபள்ளி: தொழிலார்,விவசாயிகள் சங்கம் சார்பில்,படிக்கின்ற மாணவர்களுக்கும்,ஏழை எளிய மக்களுக்கும்,முதியோர்களுக்கும் என 1000 பேருக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா, வி.மாதேபள்ளி கிராமத்தில்,சங்கத்தின் மாநில தலைவர் தி. க கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் M. ஜெயராமன்,ரகமதுல்லா, மஹபூப் அலி முன்னிலை வகித்தனர்,சின்னையன் வரவேற்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய கிருஷ்ணன்,மூன்று சங்கங்களின் சார்பில் ஆண்டு தோறும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது,இந்த ஆண்டு நாளை திட்ட உதவிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது,கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனடியாக அரசு கவனத்திற்கு கொண்டு சென்று குறைகள் நிவர்த்தி செய்ய சங்கம் ஏற்பாடு செய்யும்,அனைத்து மக்களும் தொழிலார்,விவசாய சங்கங்களில் இணைந்து செயல்படு முன் வரவேண்டும்,வறுமை இல்லா கிராமங்களை உருவாக்க வேண்டும் என கிருஷ்ணன் பேசினார்.இந்த நிகழ்வில் மு.காவல் துணை கண்காணிப்பாளர் பொன்.ஜெயராமன்,ந நிர்வாகிகள் ரெஜினா,சண்முகம்,குழந்தை,ராமச்சந்திரன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here