காந்தி ஜெயந்தி: கிருஷ்ணகிரி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள்!

0
82

கிருஷ்ணகிரி:தேசதந்தை மகாத்மா காந்தியின் 158-வது பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.கிருஷ்ணகிரி ஒன்றியம் வெங்கடாபுரம் ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையைச் சீரமைக்க வேண்டும், சேதமடைந்த சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களைச் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைப் பொதுமக்கள் முன்வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லக் கண்ணாள் மற்றும் சரவணன் ஆகியோர், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் ஊராட்சிச் செயலாளர் ஜெயக்குமார் நன்றி உரையாற்றினார்.இதேபோன்று கட்டிக்கானப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லக் கண்ணாள், சரவணன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜீவ் ஆகியோர் தலைமை தாங்கினர். இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் பி. முகுந்தன் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றும் மகளிருக்கு ஊதியத்தை உயர்த்திக் வழங்க வேண்டும் என்றும், குடிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கைகளை வைத்தனர். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் ஊராட்சிச் செயலாளர் சண்முகம் நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here