பர்கூர் 2026: மீண்டும் எழும் மதியழகன் அலை? – கோவிந்தராஜனை பின்னுக்கு தள்ளும் மக்கள் மனநிலை!

0
129

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கியமான விஐபி தொகுதியான பர்கூர் மீண்டும் அரசியல் கவனத்தின் மையமாக மாறியுள்ளது. ஒருகாலத்தில் J.ஜெயலலிதா போன்ற மிகப்பெரிய தலைவரை தோற்கடித்த வரலாறு கொண்ட இந்த தொகுதி, எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்கு பெயர் பெற்றது.

1996-ல் திமுக வேட்பாளர் சுகவனம் உருவாக்கிய அதிர்ச்சி அலை போலவே, 2021-ல் D. மதியழகன் உருவாக்கிய வெற்றி பர்கூரின் அரசியல் திசையை மாற்றியது. அதிமுக கோட்டையாக கருதப்பட்ட தொகுதியை 13,000-க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றிய அவர், இப்போது மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நிலையில் உள்ளார்.

மதியழகன் – அடித்தளத்தில் வேரூன்றிய தலைவர்

2021 வெற்றிக்கு பிறகு, வெறும் MLA ஆக இல்லாமல், தொகுதியின் வளர்ச்சியை நேரடியாக முன்னெடுத்தவர் என்ற பெயரை மதியழகன் பெற்றுள்ளார். மாவட்ட செயலாளராக பதவி ஏற்ற அவர், கட்சி அமைப்பை கிராம அளவுக்கு விரிவுபடுத்தியுள்ளார்.

குறிப்பாக, முன்னர் திமுக நுழைய முடியாத அதிமுக ஆதிக்க கிராமங்களிலும் கட்சி கிளைகளை உருவாக்கி, அரசியல் நிலவரத்தை மாற்றியுள்ளார்.

அவரது மிகப்பெரிய பலம் – மக்களுடன் நேரடி தொடர்பு. பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் அணுகக்கூடியவர் என்ற நம்பிக்கை, அவருக்கு வாக்கு வங்கியை உறுதியாக்கியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், தமிழக அரசின் பல நலத்திட்டங்களை பர்கூர் தொகுதிக்கு கொண்டு வந்ததோடு, அடிப்படை வசதிகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும், எந்தவொரு ஊழல் அல்லது குற்றச்சாட்டு இல்லாத சுத்தமான அரசியல் முகம், அவரை மற்ற வேட்பாளர்களில் இருந்து வேறுபடுத்துகிறது. இது தற்போதைய அரசியல் சூழலில் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் சவால்கள் இல்லாமல் இல்லை. ரஷ்யா–உக்ரைன், ஈரான், இசுரேல்,அமெரிக்கபோரின் தாக்கம் மற்றும் அதிக உற்பத்தி காரணமாக மாங்காய் விலை சரிவடைந்தது, பர்கூர் விவசாயிகளை பாதித்துள்ளது.
“குறைந்தபட்ச ஆதார விலை பெற்றுத்தர வேண்டும்” என்பது விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதை நிறைவேற்றும் திறன் மதியழகனிடம் உள்ளது என்ற நம்பிக்கை அவருக்கு சாதகமாகவே உள்ளது.

மறுபுறம், அதிமுக வேட்பாளர் E. C. கோவிந்தராசன் மீது தொகுதி மக்களிடையே எதிர்மறை மனநிலை தெளிவாகக் காணப்படுகிறது. கட்சி மாறுதல், நிலையான அரசியல் நிலைப்பாடு இல்லாதது போன்ற காரணங்கள், அவரின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளன.

2016-ல் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர், தற்போது அதிமுக சார்பில் களமிறங்கியிருப்பது, “துரோக அரசியல்” என்ற விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
மேலும், அவரை சுற்றியுள்ள குற்றாட்டுகள்,கட்சி மாறியது,சாதி வெறி குற்றச்சாட்டுகள்,உள்ளூர் அளவில் ரவுடியிசம் குறித்த குற்றம்சாட்டுகள்,
டெண்டர் கமிஷன் விவகாரங்கள்,
இவை அனைத்தும் அவரை பின்னுக்கு தள்ளும் காரணிகளாக மாறியுள்ளன.

தமிழக வெற்றி கழகம் சார்பில் முரளி என்ற புதிய முகம் களமிறங்கியுள்ளதும் கவனிக்கத்தக்கது.
“இது சினிமா அல்ல, மக்கள் சேவை” என்ற எதிர்க்குரல் இருந்தாலும், அந்தக் கட்சியின் ‘விசில்’ சின்னம் குறிப்பாக அதிமுக வாக்குகளை பிளக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

இறுதி கணிப்பு – யாருக்கு சாதகம்?

மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், நேரடி போட்டி திமுக மற்றும் அதிமுக இடையே தான். ஆனால் நிலைமைகளை கணக்கில் எடுத்தால்:

மதியழகன் – வலுவான அடித்தளம் + வளர்ச்சி பணி + சுத்தமான இமேஜ்.

கோவிந்தராஜன் – எதிர்மறை பிம்பம் + நம்பகத்தன்மை குறைவு.

தமிழக வெற்றி கழகம் – அதிமுக வாக்கு வங்கியை பிரித்து திமுக எளிதாக வெல்ல வாய்ப்பை ஏற்படும்.

இந்த மூன்றையும் சேர்த்து பார்க்கும்போது, பர்கூர் தொகுதியில் மீண்டும் மதியழகன் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என கள நிலவரம் சுட்டிக்காட்டுகிறது.

“அதிமுக கோட்டையை உடைத்தவர்” என்ற பெயரை “திமுக கோட்டையாக மாற்றியவர்” என உறுதிப்படுத்தும் தேர்தலாக 2026 பர்கூர் மாறுமா?பார்ப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here