
கிருஷ்ணகிரி தவெக MLA பி. முகுந்தன் அவர்களுக்கு கிருஷ்ணகிரி நகரின் ஐந்து ரோடு பகுதியில் உற்சாகமும், எழுச்சியும் மிக்க பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தவெக தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியையொட்டி ஐந்து ரோடு பகுதி முழுவதும் கட்சிக் கொடிகள், பேனர்கள் மற்றும் வரவேற்பு பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. MLA முகுந்தன் வருகை தந்தவுடன் தொண்டர்கள் உற்சாக முழக்கங்களை எழுப்பி, பட்டாசுகள் வெடித்து, கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் மலர்மாலைகள் அணிவித்து, சால்வை அணிவித்து அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் எம். சசிகுமார் தலைமையேற்று ஏற்பாடுகளை செய்திருந்தார். மாவட்ட நிர்வாகிகளான இளையப்பன், ரத்தினவேல், ஃபயாஸ் பாஷா, சுரேஷ் மற்றும் ஹேமப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மகளிர் அணியைச் சேர்ந்த கோவிந்தி மற்றும் கீர்த்தனா ஆகியோரும் பெண்கள் அணியினருடன் கலந்து கொண்டனர்.மேலும் கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர்களான சந்திரசேகர், அருண் சங்கர், கோவிந்தராஜ், ஹரி ஆகியோரும், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் பேரூர் கழக செயலாளர் தமிழ் குமரன் உள்ளிட்ட பல்வேறு நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகளும் பங்கேற்று MLA முகுந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சி கிருஷ்ணகிரி நகரில் பெரும் அரசியல் கவனத்தை ஈர்த்தது.
