கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அரிசி ஒதுக்கீட்டை உயர்த்த கோரி அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்த MLA முகுந்தன்!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அரிசி ஒதுக்கீட்டை உயர்த்த கோரி அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்த MLA முகுந்தன்!

0
116

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கான மாதாந்திர அரிசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சரை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.அந்த மனுவில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளொன்றுக்கு தற்போது 1,200-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாதந்தோறும் வெறும் 2,500 கிலோ அரிசி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுவது கடுமையான பற்றாக்குறையை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.மருத்துவமனை தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் சுமார் 400 நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் நிர்ணயம் செய்யப்பட்ட அரிசி ஒதுக்கீடு, தற்போதைய தேவைக்கு முற்றிலும் போதாமையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனால், ஏழை எளிய நோயாளிகளுக்கு தினசரி தரமான உணவு வழங்குவதில் மருத்துவமனை நிர்வாகம் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும், உடனடியாக துறையினர் மூலம் கள ஆய்வு மேற்கொண்டு தற்போதைய 2,500 கிலோ அரிசி ஒதுக்கீட்டை 4,500 கிலோவாக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் MLA முகுந்தன் வலியுறுத்தினார்.மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) மூலம் ஒவ்வொரு மாத தொடக்கத்திலேயே தடையின்றி அரிசி விநியோகம் நடைபெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here