கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றியம் சார்பில் மாவட்ட தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம்

3
116

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றியம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு பணியின் போது கொலைவெறி தாக்குதல் நடத்திய தேனி மாவட்ட குற்றவாளிகளையும், நில அளவை பணியின்போது பெட்ரோல் வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்ட குற்றவாளிகளையும், தஞ்சாவூர் மாவட்ட பெண் ஊழியரை தாக்கியவர்களையும், தேனி மாவட்டத்தில் நில அளவை பணி செய்த ஊழியரை தகாத வார்த்தைகளால் இழிவாக பேசி அச்சுறுத்தியவரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், முதல்வரின் பணி பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கிட வலியுறுத்தியும், மாவட்டத் தலைவர் பெரியசாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ் வரவேற்புரையாற்றினார். கிருஷ்ணகிரி கோட்டத் தலைவர் மாவீரன், ஓசூர் கோட்டை தலைவர் ராமன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டச் செயலாளர் மோகன் கோரிக்கையை விளக்க உரையாற்றினார். மாவட்டத் தலைவர் நந்தகுமார், மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் ஜெகதாம்பிகா,மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டவர்கள் கண்டன உரையாற்றினார்கள். மாநிலத் துணைத் தலைவர் கல்பனா நிறையுரையும், மாவட்ட பொருளாளர் குமரேசன் நன்றி உரையும் ஆற்றினார்கள்.

3 COMMENTS

  1. Navigating this site felt like a breath of fresh air compared to all the cluttered platforms I used to deal with. The loading speed is lightning fast and I love how transparent the withdrawal process is. It really feels like they care about our enjoyment more than just quick deposits. Drop in and experience the difference yourself at pk98pkr

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here